இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தையடுத்து ஏற்பட்ட தீப்பரவலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் ஏற்பட்ட தீப்பரவலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை அங்கு ஏற்பட்ட தீப்பரவலை அணைப்பதற்கு 8 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீக்காயமடைந்த பலர் வைத்தியசாலையில் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.