பங்களாதேஷுக்கு எதிரான வரவிருக்கும் டி20 சர்வதேச தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
சரித அசலங்க தலைமையிலான இந்த அணியில் மீண்டும் தசூன் ஷானக்க இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மூன்று போட்டிகள் கொண்ட டி:10 தொடர் ஜூலை 10 ஆம் திகதி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இரண்டாவது போட்டி ஜூலை 13 ஆம் திகதி தம்புளளையிலும், மூன்றாவது டி20 போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்திலும் நடைபெறும்.
இலங்கை அணி விபரம்:
சரித அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டீஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டீஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தசூன் சானக்க, துனில் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, சமிக்க கருணாரத்ன, மத்திஸ பத்திரன, நுவான் துஷார, பினுர பெர்னாண்டோ மற்றும் எஷான் மலிங்க.