கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. கொங்கோ குடியரசின் Bolomba பிராந்தியத்தை நோக்கி 400 பேருடன் பயணித்த படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
மேலும் தீக்காயங்களுக்குள்ளாகிய சுமார் 100 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன ஏனையோரை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post படகு விபத்தில் 50 பேர் பலி – நூற்றுக்கணக்கானோரெ காணவில்லை appeared first on Global Tamil News.