பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று இரவு நடைபெறவுள்ள IPL கிரிக்கெட் தொடரில் 41-வது லீக் போட்டியில் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று BCCI தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப் படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அந்தவகையில் இந்த போட்டியின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரர்கள், நடுவர்கள் கையில் கறுப்பு பட்டி அணிவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.