புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க அதிமுக வலியுறுத்தல் | AIADMK insists govt to give holiday to TASMAC shops on Good Friday

சென்னை: புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவுகூர்ந்து உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.

இயேசுபிரான் அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததை நினைவுகூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை. கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று வரும் 18.4.2025 புனித வெள்ளி அன்று, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!