மற்றொரு பஸ் விபத்து – 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி


வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி, இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் பின்புறத்தில் மோதி இன்று (24) விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்து தனமல்வில பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பாக லொறியின் சாரதி தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!