முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பானை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தசநாயக்க முன்னிலையான போது அவர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு அவற்றில் முதல் இரண்டு வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு வழக்கிற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது