ரியல்மி 14T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | realme 14t 5g smartphone launched in india price specs

சென்னை: இந்தியாவில் ரியல்மி 14T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இது மிட்-செக்மென்ட் ரேஞ்ச் விலை பிரிவு போனாக சந்தையில் வெளிவந்துள்ளது.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் ரக போன்களையும் வெளியிடும். ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது இந்தியாவில் ரியல்மி 14T 5ஜி போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 14 சீரிஸ் போன்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது. கடந்த ஜனவரியில் ரியல்மி 14 புரோ+ போன் அறிமுகமானது.

ரியல்மி 14T: சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 50 + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • 6,000mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
  • இதன் விலை ரூ.17,999 முதல் ஆரம்பமாகிறது

நன்றி

Leave a Reply

error: Content is protected !!