இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியின், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் 225 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிரசித் கிரிஸ்ணா தெரிவு செய்யப்பட்டார் .
மேலும் இப் போட்டியானது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு குஜராத் அணி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.