அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் காயம்


கொஸ்கம, சுதுவெல்லவில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் அவிசாவளையைச் சேர்ந்த 30 வயது பெண் மற்றும் அவரது 12 வயது மகள் மற்றும் 44 வயது ஆண் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களின் அடையாளம் இன்னும் தெரியவரவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்ய கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!