புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
நோன்புப் பெருநாளுக்காக நாளை 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பதில் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
The post அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை appeared first on LNW Tamil.