ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற 27வது லீக் போட்டியில் சன்ரைசஷ் ஹைதராபாத் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டி இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் ஸ்ரெயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும் பிராப்சிம்ரன் சிங் 42 ஓட்டங்களையும் குவித்தனர்.
பந்துவீச்சில் ஹர்சால் பட்டேல் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இமாலய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் இரு விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கையடைந்தது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அபிஷேக் சர்மா 10 சிக்சர்கள், 14 பௌண்ட்ரிகள் உள்ளடங்களாக 141 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.