வாடிகன் சிட்டி: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அடக்கம் 26-ம் தேதி நடைபெற்றது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், புதிய போப் தேர்வானதை குறிக்கும் வகையில் வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தின் புகை போக்கியிலிருந்து நேற்று வெண்புகை வெளியேற்றப்பட்டது. மேலும், புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய மணிகள் ஒலித்தன.
கார்டினல்கள் தங்கள் மாநாட்டின் இரண்டாவது நாளில் கத்தோலிக்க திருச்சபையை வழி நடத்துவதற்கான 267-வது போப்பை தேர்வு செய்தனர். முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பெர்வோஸ்ட் என்பவர் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இனிமேல் 14-ம் லியோ என அழைக்கப்படுவார்.