கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவிலேயே நிரந்தரமாக வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அல் நஸ்ர் அணியுடனான தனது ஒப்பந்தத்தை 2027 வரை நீட்டித்துள்ள அவர், சவுதியை “அமைதி மற்றும் பாதுகாப்பு” நிறைந்த இடமாகவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சவுதியின் வளர்ச்சிக்கும் பங்களிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.