சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெல்லி அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஜேக் பிரேசர் டக்கவுட்டாக அபிஷேக் போரெல் அதிரடியாக விளையாடி 33 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று கேப்டன் அக்சர் பட்டேல் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். சமிர் ரிஸ்வி 20 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், கேஎல் ராகுல் மறுமுனையில் அதிரடி காட்டினார்.
6 பவுண்டரி மூன்று சிக்சர் என 51 பந்துகளில் அவர் 77 ரன்கள் எடுத்தார். இறுதியில் டிஸ்டன்ஸ் ஸ்டெப்ஸ் 24 ரன்கள் எடுக்க அதிரடி வீரர் அஷ்டோஸ் சர்மா ஒரு ரன் இருக்கும்போது ரன் அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு தரப்பில் கலீல் அகமத் நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆனால் முதல் போட்டியில் இந்த சீசனில் களமிறங்கிய முகேஷ் சவுத்ரி நான்கு ஓவர்கள் வீசி 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதில் எந்த விக்கெட்டையும் அவர் எடுக்கவில்லை. ஏழு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.
அஸ்வின் மூன்று ஓவரில் 21 ரன்களும், ஜடேஜா இரண்டு ஓவரில் 19 ரன்கள் விளாசி ஒரு விக்கெட்டும் நூர் முகமது மூன்று ஓவரில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும், பதிரானா 4 ஓவரில் 31 விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தார்கள்.
சிஎஸ்கே அணி இன்று பில்டிங்கிலும் சில கேட்ச்களை தவற விட்டு கூடுதலாக 15 ரன்கள் வழங்கியது. சிஎஸ்கே அணியின் பில்டிங் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!