அறிவிக்கப்பட்டது இந்திய அணி.. புது கேப்டன் இவர்தான்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர், ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியானது, 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 தொடருக்கு இதுதான், இந்தியாவின் முதல் தொடர் என்பதால் வெற்றியுடம் துவங்க வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது.

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால், இளம் பேட்டர்களை கொண்ட இந்திய அணிதான், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 

இதனால், இத்தொடர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வாகி உள்ளார். துணைக் கேப்டன் பதவியை ரிஷப் பந்திற்கு கொடுத்துள்ளனர்.

மேலும், பேட்டர்கள் இடங்களில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் ஆகியோரையும், ஆல்-ரவுண்டர்கள் இடங்களில் நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துரூவ் ஜோரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்தூல் தாகூர் ஆகியோரையும், பௌலர்கள் இடங்களில் ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ஜூன் 20ஆம் தேதி, லீட்ஸில் துவங்கும். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜூலை 2ஆம் தேதி, பிர்மிங்கமிங்கில் துவங்கும். அடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஜூன் 10ஆம் தேதி லார்ட்ஸில் துவங்கும். 

அடுத்து, நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன், பெரிய இடைவேளை இருக்கிறது. நான்காவது டெஸ்ட், ஜூலை 23ஆம் தேதி, மான்சிஸ்டரில் துவங்கும். இதனைத் தொடர்ந்து, கடைசி டெஸ்ட் போட்டி, ஜூலை 31ஆம் தேதி ஓவலில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில், ரிஷப் பந்த், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் , நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துரூவ் ஜோரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்தூல் தாகூர் , ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

இந்திய டெஸ்ட் அணியில், கே.எல்.ராகுலை ஓபனர் இடத்தில் சேர்த்துள்ளனர். மேலும், முன்பெல்லாம் அவரை விக்கெட் கீப்பர் பேட்டர் எனக் குறிப்பிடுவார்கள். ஆனால், தற்போது அப்படி குறிப்பிடவில்லை. 

முழுநேர பேட்டர் என்றே குறிப்பிட்டுள்ளனர். விராட் கோலியின் நான்காவது இடத்தில் கருண் நாயர் விளையாடவே அதிக வாய்ப்புள்ளது. சர்பரஸ் கானுக்கு இத்தொடரில் இடம் வழங்கப்படவில்லை. அவர் சமீப காலமாகவே பார்ம் அவுட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!