‘அல் நக்­பா’வை நினை­வு­கூரும் நிகழ்வில், பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்த கருத்துக்கள்

 
இலங்கையில் நடைபெற்ற  ‘அல் நக்­பா’வை நினை­வு­கூரும் நிகழ்வில் இலங்கை பலஸ்­தீன ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலை­வ­ரான அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்த கருத்துக்கள்

ஜன­நா­யகம் மற்றும் பாரா­ளு­மன்­ற­வா­தத்தின் பரந்த மற்றும் நல்­லொ­ழுக்க வரை­ய­றை­யுடன் உல­க­ளா­விய பிரச்­சி­னை­களை இலங்கை அணு­கு­கி­றது.  ‘எமது பாரா­ளு­மன்ற மற்றும் அர­சாங்­கத்தின் கொள்கை வகுக்கும் செயல்­முறை பெறு­ம­தி­மிக்­கது என்­ப­தோடு கொள்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாகும். நாம் வர­லாற்றின் சரி­யான பக்­கத்தில் இருக்க விரும்­பு­கிறோம். மக்­களால் வர­லாறு எழு­தப்­ப­டும்­போது, உல­க­ளா­விய நீதிக்­காக நிமிர்ந்து நின்ற ஒரு தேச­மாக இலங்கை பிர­கா­சிக்க வேண்டும் என்று நாம் விரும்­பு­கிறோம்.

மே 15, 1948 அன்று நடந்த நக்­பா­வுக்குப் பிறகு பலஸ்­தீன மக்கள் பல தசாப்­தங்­க­ளாக ஒடுக்­கு­முறை மற்றும் ஆக்­கி­ர­மிப்பை அனு­ப­வித்து வரு­கின்­றனர் ஒக்­டோபர் 7, 2023 தொடக்கம் பதி­னைந்து மாதங்கள் நீடித்த முன்­னெப்­போதும் இல்­லாத இனப்­ப­டு­கொ­லை­யான நக்பா, அமெ­ரிக்­காவின் முழு ஆத­ரவு மற்றும் உடந்­தை­யுடன் மீண்டும் தொடங்­கி­யுள்­ளது.

இஸ்­ரேலிய ஆக்­கி­ர­மிப்பை ‘அப்­பா­விகள் மீதான படு­கொலை, மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான குற்றம் மற்றும் உல­கத்தின் மன­சாட்­சியின் மீது படிந்த ஒரு கறை. சர்­வ­தேச சமூகம் என்று தன்­னைத்­தானே அறி­வித்துக் கொள்­வது ‘முற்­றிலும் அவ­மா­ன­க­ர­மா­னது’  இது உல­க­ளா­விய ஒழுங்கை அரித்து, நீதியை நிலை­நி­றுத்­தவும் அனைத்து மக்­களின் உரி­மை­களைப் பாது­காக்­கவும் வடி­வ­மைக்­கப்­பட்ட நிறு­வ­னங்கள் மீதான நம்­பிக்­கையை சுக்­கு­நூ­றாக உடைத்­து­விட்­டது.  முழு மக்­களும் இனப்­ப­டு­கொலை மற்றும் இடம்­பெ­யர்வை எதிர்­கொள்­ளும்­போது நாம் சும்மா இருக்க முடி­யாது. 

பல­வீ­ன­மா­ன­வர்­க­ளுக்கு அமுல்­ப­டுத்­தப்­படும் அதே வேளையில் பலம்­வாய்ந்­த­வர்­க­ளுக்குப் புறக்­க­ணிக்­கப்­படும் விதத்தில் சர்­வ­தேச சட்டம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சிலரால் ஒரு கரு­வி­யாக மாறு­வதை நாம் அனு­ம­திக்க முடி­யாது எனவும் அவர் தெரி­வித்தார். இன அழிப்­புக்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் கண்­டித்து, காஸாவில் உட­னடி போர் நிறுத்தம், பலஸ்­தீன பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இஸ்­ரே­லிய துருப்­புக்­களை திரும்பப் பெறுதல், ஜெரூ­ஸ­லத்தில் உள்ள அல்-­அக்ஸா பள்­ளி­வாயல் முற்­றுகை மற்றும் அவ­ம­திப்­புக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!