எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 4 இலட்சம் பயனர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பண்டிகை காலத்தில் நாட்டு மக்களுக்கு சதொச ஊடாக நிவாரண விலையில் பொருட்களை வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்த நிலையில், மே மாதம் நடக்கவுள்ள தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!