ஆசிய நாடுகளில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொரோனா தொற்று  மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஆசியா நாடுகளில் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அங்குள்ள சுகதாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, பல்வேறு நாடுகளில் பரவியது. இந்தியாவில் கொரோனா தொற்றால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 

பல்வேறு நாடுகளிலும் மக்கள் உயிரிழந்த பிறகு, கொரோனா தடுப்பூசி தொடங்கி பல்வேறு சுகாதார நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதன்பிறகு பெரிதாக கொரோனா பரவில் இல்லாமல் இருந்த நிலையில், அண்மையில் கூட, சீனாவில் எச்எம்பிவி என்ற கொரோனா தொற்று பரவியது. 

இந்த நிலையில், மீண்டும் ஆசிய நாடுகளான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா பரவி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள சுகதாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஹாங்காங்கின் சுகாதாரப் பாதுகாப்பு மையத்தின் தொற்று நோய்ப் பிரிவின் தலைவரான ஆல்பர்ட் ஆவ் கொரோனா வைரஸின் செயல்பாடு அதிகமாக உள்ளதாக கூறினார். 

மேலும், 2025 மே 3ஆம் தேதியில் இருந்து ஹாங்காவில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து வெளியான தரவுகளின்படி, மே 3ஆம் தேதிக்கு பிறகு ஹாங்காங்கில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. 

சுமார் ஏழு மில்லியன் மக்கள் வசிக்கும் ஹாங்காங்கில் கோவிட் பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல அதிகமாக இல்லை என்றாலும், சில காரணங்களால் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

சிங்கப்பூரில் 2025 மே 3ஆம் தேதி முதல் சுமார் 28 சதவீதம் கொரோனா பரவில் அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்று எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்துள்ளது. 

நாளாந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும், நோய் எதிர்ப்பு குறைவது போன்ற காரணங்களால் கொரோனா வைரஸ் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!