ஆறு ஆண்டுகளில் பின்னர் முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை (06) வடகொரியா பியோங்யாங்கில் சர்வதேச மரதன் போட்டியை நடத்தியது.
இதன்போது, கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அதன் எல்லைகளை பெருமளவில் மூடியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் சுமார் 200 வெளிநாட்டு ஓட்டப்பந்தய வீரர்கள் போட்டியில் பங்கெடுத்தனர்.
சீனா, ருமேனியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க வருகை தந்ததாக அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் மற்றும் ரோடாங் சின்முன் நேற்று செய்தி வெளியிட்டன.
1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மாரத்தான், அதன் நிறுவனத் தலைவர் கிம் இல் சுங்கின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மரதனுக்கு முன்பு, இந்தப் பந்தயம் கடைசியாக 2019 இல் நடைபெற்றது.
இதில் 950 வெளிநாட்டினர் பங்கேற்றனர்.
அடுத்த ஆண்டு, கொவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது, வட கொரியா எல்லைகளை மூடி தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டது.