இந்தியாவில் 106 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிராவில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுக்கின்றது.

இவற்றில் 101 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் எனவும் மீதமுள்ளவர்கள் புனே, தானே மற்றும் கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்தியசுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!