புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
இதற்காக 4 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக 10.4 பில்லியன் ரூபா நிதி இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
அடுத்த வருட நடுப்பகுதியில் புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.