இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பங்களதேசுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மூன்று 20 – 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடுவதற்காக பங்களதேஷ் செல்லவுள்ளது. இதன்போது இருதரப்பு 20 – 20 தொடரை பங்களதேஷ் அணிக்கு முதன்முறையாக இந்திய அணி விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டித் தொடரின் முதல் இரு ஆட்டங்கள் மற்றும் 20 – 20 தொடரின் கடைசி இரு ஆட்டங்கள் மிர்பூரிலும் 3-வது ஒருநாள் போட்டி மற்றும் முதல் 20 -20 ஆட்டம் சட்டோகிராமிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி டாக்கா புறப்பட்டுச் செல்கிறது.
ஆகஸ்ட் 17-ல் முதல் ஒருநாள் போட்டியும் 20-ம் தேதி 2-வது ஒருநாள் போட்டியும், கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி 23-ம் தேதியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 26, 29 மற்றும் 31-ம் தேதிகளில் டி 20 தொடரிடன் ஆட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.