இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் குறித்து அறிவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமாக பயணிப்பார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இந்தியப் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஶ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடங்கி வைப்பார்.

இப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!