இலங்கையால் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் அதி உயர் கௌரவமான “இலங்கை மித்ர விபூஷண்” விருது, இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இலங்கையின் இந்த உயரிய விருதை இந்திய தலைவர் ஒருவர் பெற்றுக்கொண்டமை இதுவே முதல் முறையாகும். இந்திய-இலங்கை நட்புறவை வலுப்படுத்துவதில் நிலைபேறான பங்களிப்பை வழங்கியமைக்காக பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – இலங்கை இடையேயான விசேட நட்புறவு மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான புராதன உறவுகளுக்கு இந்த கௌரவத்தை அர்ப்பணித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!