பங்களாதேஷ் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இச் சுற்றுப்பயணத்தின் போது குறித்த இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் மோதவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடருக்காக பங்களாதேஷ் அணி ஜூன் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.