இலங்கை அணியில் குழப்பங்கள் நீடிக்கின்றன!- சனத் ஜெயசூர்யா

”இலங்கை T20 அணியின் துடுப்பாட்ட திறன்களை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகள்  மேற்கொள்ளப்படும்” என தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இன்று (16) நடைபெறவுள்ள பங்களாதேஷுடன் நடைபெற்றுவரும் மூன்றாவது மற்றும் இறுதி T20 போட்டி குறித்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சனத் ஜெயசூர்யா மேலும் தெரிவிக்கையில்; ‘அணியின்  துடுப்பாட்டம் குறிப்பாக மூலாதார வரிசை (Top-order)  மற்றும் நடுப்பகுதி (middle-order) மிக முக்கியமாக உள்ளது. இவை இரண்டிலும் ஒருங்கிணைந்த செயல்திறனை உருவாக்கும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.’

‘அணியில் சில பதவிகளை பற்றிய குழப்பங்கள் இன்னும் நீடிக்கின்றன. ஆனால் இவை எல்லாம் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் தீர்வுக்கு வரக்கூடியவை” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை  பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான  மூன்றாவது மற்றும் இறுதி T20 போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply