இலங்கை எரிபொருள் நிறுவனம் மீது அமெரிக்கா தடை

ஈரனிய எரிபொருளை சீனாவிற்கு கொண்டு செல்ல உதவிய “ஷானன் 2” கப்பலின் தொழில்நுட்ப மேலாளராகப் பணியாற்றிய இலங்கை நிறுவனமான மரைன் சொல்யூஷன்ஸ் மீது அமெரிக்க திறைசேரி தடைகளை விதித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இது ஈரானிய பெட்ரோலிய அமைச்சர் மொஹ்சென் பக்னெஜாட்டின் சட்டவிரோத எரிபொருள் வர்த்தகத்தை உலகிற்கு மறைக்க உதவியது. 

கொழும்பில் அமைந்துள்ள மரைன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஈரானிய எரிபொருளை கொண்டு சென்ற “ஷானன் 2” கப்பலின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான மார்ஷல் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட செலஸ்டே மரைடைம் மீது அமெரிக்க திறைசேரி தடைகளை விதித்துள்ளது.  

அமெரிக்க வெளியுறவுத்துறை நிர்வாக உத்தரவுகள் 13846 மற்றும் திறைசேரி நிர்வாக உத்தரவுகள் 13902 இன் கீழ் ஈரானிய பெட்ரோலிய அமைச்சர் மொசைன் பக்னெஜாட்டின் சட்டவிரோத எரிபொருள் வர்த்தகத்தைத் தடுக்க இந்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.  

நன்றி

Leave a Reply

error: Content is protected !!