அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணி வீரர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்ந்தெடுத்தது.
அந்த அணி இன்று மாலை அவுஸ்திரேலியாவுக்கு புறப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஒரு நாள் தொடர் ஜூலை 4, 6 மற்றும் 9 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
அதேநேரத்தில் இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் முறையே ஜூலை 13 முதல் 16 வரையும், ஜூலை 20 முதல் 23 வரையும் நடைபெறும்.
அனைத்து போட்டிகளும் டார்வினில் விளையாடப்படும்.