இலங்கை கிரிக்கெட் வீரர்களின் களத்தடுப்பு (ஃபீல்டிங்) தரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் விரிவான 10 நாள் ஃபீல்டிங் திட்டத்தை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்த சிறப்புத் திட்டம் மே 7 ஆம் திகதி (நாளை) தொடங்கும்.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணிகள், வளர்ந்து வரும் அணிகள், பிரீமியர் கிளப் வீரர்கள், தேசிய U19 அணி மற்றும் பெண்கள் ‘A’ அணியும் இடம்பெறும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தரம் 3 தகுதி பெற்ற பயிற்சியாளரான ஸ்ரீதர், 2014 முதல் 2021 வரை 300க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
முன்னாள் இந்திய களத்தடுப்பு பயிற்சியாளர் இலங்கை தேசிய ஆண்கள் அணியுடன் இந்த திட்டத்தைத் தொடங்குவார்.
பின்னர் ஏனைய அணிகளுக்கு பயிற்சி அளிப்பார்.
அங்கு அவர் விளையாட்டு நிலைமைகளைப் பிரதிபலிக்க களத்தடுப்பு பயிற்சிகள், திறன் சார்ந்த பயிற்சி மற்றும் உருவகப்படுத்தப்பட்ட போட்டி காட்சிகளை நடத்துவார்.
இலங்கை கிரிக்கெட்டில் தனது 10 நாள் பணியின் போது, தேசிய, உயர் செயல்திறன் மற்றும் கழக பயிற்சியாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவார்.