இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ்( Rodney Gibbs) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நியூசிலாந்தின் ஆல் பிளாக்ஸ் செவன்ஸ் (All Blacks Sevens) அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளார்.
ஆசிய ரக்பி பிரதான நான்கு அணிகள் மோதும் ரக்பி டாப் 4 (Rugby Top 4) ரக்பி தொடர் மே 26ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், குறித்த தொடர் நிறைவடையும் வரையில் ரோட்னி கிப்ஸ் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.