பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
விமான நிலையத்தின் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் தீ பரவியதால் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் சுமார் 18 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டதுடன், சுமார் 200,000 பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
அத்துடன், உலகளவில் மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, விமான நிலையத்தின் தலைவர் இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தற்போது விமானச் சேவைகள் குறிப்பிட்ட அளவில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமையிலிருந்து சேவைகள் முழு வீச்சில் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இந்த சம்பவம் ஹீத்ரோ விமான நிலையத்தின் கட்டுப்பாட்டிற்கு மீறியது என்று பிரிட்டனின் போக்குவரத்து அமைச்சர் கூறியிருக்கிறார்.