உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் யார் என்பதை பொதுமக்கள் மிகக் குறுகிய காலத்தில் அறிந்து கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தொடர்பான விசாரணைகள் தற்போது சுயாதீனமாக நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதன்படி, நீதிமன்றங்கள் உள்ளிட்ட சட்டத் துறைகள் மற்றும் நிறுவனங்களால் எதிர்காலத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் தொடர்புடைய குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் வசந்த மேலும் தெரிவித்துள்ளார்.