உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பிள்ளையான் முன்னரே அறிந்திருந்தார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  அவர், பிள்ளையான் சிறையில்  இருக்கும்போதே இதனை அறிந்து வைத்திருந்தார் என்பதற்கான தகவல்களும் உள்ளதாக  குறிப்பிட்டார்.

“யோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சிவனேசதுறை சந்திரகாந்தன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற வேளை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தார்.

அந்நேரம் பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னரே தெரியும் என்பதற்கான தகவல்கள் தற்போது வௌியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் வேளையில், அதில் சதித்திட்டம் ஒன்று உள்ளமை தொடர்பில் கண்டுபிடிக்க, தற்போது நீண்ட விசாரணை ஒன்று நடைபெற்று வருகின்றது. அதனால் குறுகிய காலத்தில் நீதிமன்றத்துக்கு பல விடயங்கள் முன்வைக்கப்படும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!