உலகின் மிகவும் ஆபத்தான கைதிகளை அடைக்கப் பயன்பட்ட சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் இந்தச் சிறை அமெரிக்கக் கடற்கரைகளில் அமைந்துள்ளது. சுற்றிலும் நீர், அதி ஆபத்தான சுறாக்களைக் கொண்ட இந்தச் சிறை பல ஆண்டுகளாகவே பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே 1963ல் மூடப்பட்ட ஒரு அமெரிக்காவின் மிக மோசமான சிறைகளில் ஒன்றை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ள டிரம்ப், அதை விரிவுபடுத்தவும் ஆணையிட்டுள்ளார்.
தற்போது இது சுற்றுலா தளமாக உள்ள நிலையில், மீண்டும் இது சிறையாக மாறவுள்ளது. இனி நாட்டின் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகள் இந்தச் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
Stay in the loop – join us on WhatsApp for the latest updates!