உலகின் மிகவும் வயதான நபர் ஒன்ற பெருமைய இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 115 வயது மற்றும் 252 நாட்களில் பெற்றுள்ளார்.
அதன்படி, சர்ரேயின் லைட்வாட்டரில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் (Ethel Caterham), புதன்கிழமை (01) 116 ஆவது வயதில் உயிரிழந்த பிரேசிலிய கன்னியாஸ்திரியான இனா கனபரோ லூகாஸின் மரணத்தைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்தப் புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் உலகின் வயதான மக்களின் தரவுத்தளமான லாங்கிவிகுவெஸ்ட் (LongeviQuest) உறுதிப்படுத்தியுள்ளன.
எதெல் கேட்டர்ஹாம் 1909 ஆகஸ்ட் 21 அன்று ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு கிராமத்தில் எட்டு குழந்தைகளில் இரண்டாவது இளையவராகப் பிறந்தார்.
அவர் தற்போது தெற்கு இங்கிலாந்தின் சர்ரேயில் அமைந்துள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார்.
அவரது கணவர் மற்றும் அவரது இரண்டு மகள்களையும் விட நீண்ட காலம் உயிர் பிழைத்துள்ளார்.
அவரது சகோதரிகளில் ஒருவரான கிளாடிஸ் 104 வயது வரை வாழ்ந்தார்.
டைட்டானிக் கப்பல் மூழ்கியது, முதலாம் உலகப் போர், ரஷ்யப் புரட்சி, பெரும் பொருளாதார மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றை கேட்டர்ஹாம் கடந்து வந்துள்ளார்.