ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்​சம் கோடி: இதுவரை இல்லாத அதிகபட்சம் | GST collections in April 2025 hit record high

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12.6 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக ரூ.2.37 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இந்த வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாகவும், கடந்த 2024 ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடியாக இருந்தன.

உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமாக கிடைத்த ஜிஎஸ்டி வசூல் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.9 லட்சம் கோடியாகவும், இறக்குமதி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ.46,913 கோடியாகவும் இருந்தன.

ஏப்ரலில் ரீபண்ட் செய்யப்பட்ட தொகை 48.3 சதவீதம் உயர்ந்து ரூ.27,341 கோடியானது. ரீபண்டுக்கு பிறகான சரி செய்யப்பட்ட நிகர ஜிஎஸ்டி வசூலானது ஏப்ரலில் 9.1 சதவீதம் அதிகரித்து ரூ.2.09 கோடியாக இருந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!