ஏறுமுகத்தில் தங்கம் விலை: இன்று ஒரு கிராம் ரூ.9,090 | Chennai gold rate today sees hike

சென்னை: தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று (புதன்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்கா – சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மே 12-ம் தேதி ரூ. 2,360 வரை குறைந்து, ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. மே 28-ம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 4) கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72.720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கு விற்பனையாகிறது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!