ஐடெல் ‘சிட்டி 100’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | itel city 100 smartphone launched in india price specs

சென்னை: இந்தியாவில் ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரைவாக பார்ப்போம்.

சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் சிட்டி 100 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலையில் தரமான கேமரா மற்றும் விரைவான செயல்பாடு கொண்ட ஸ்மார்ட்போனை சந்தையில் எதிர்பார்க்கும் பயனர்களை டார்கெட் செய்து இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • Unisoc T7250 சிப்செட்
  • பின்பக்கத்தில் 13 மெகாபிக்சலை கொண்டுள்ளது கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,200mAh பேட்டரி
  • 18 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
  • 4ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்ட்-சி போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.7,599

நன்றி

Leave a Reply

error: Content is protected !!