ஐ.பி.எல் திருவிழா இன்று ஆரம்பம் – சேப்பாக்கத்தில் களமிறங்கும் அனிருத்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இந்த கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறவுள்ளது.

இதில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர்.

நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங், திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்தநிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள சென்னை, மும்பை போட்டிக்கு முன்னர் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!