ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | oppo reno 14 series smartphone launched in india price specs

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் ஒப்போ ரெனோ சீரிஸ் வரிசையில் இரண்டு போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ மாடல் போன்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. ரெனோ 14 – பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலும், ரெனோ 14 புரோ – சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலும் வெளிவந்துள்ளது. ரெனோ 14 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 8350 சிப்செட்
  • 50 + 8 + 50 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 8ஜிபி / 12ஜிபி ரேம்
  • 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 6,000mAh பேட்டரி
  • 80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் இல்லை
  • இந்த போனின் விலை ரூ.37,999 முதல் தொடங்குகிறது
  • தற்போது இதை முன்பதிவு செய்யலாம். 8-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும்
  • ஒப்போ ரெனோ 14 புரோ ரூ.49,999 முதல் விற்பனையாகிறது

நன்றி

Leave a Reply

error: Content is protected !!