பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலையை விசாரிக்க 6 பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலையை வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவரான கஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று பொலீசார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த டான் பிரியசாத், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.