இலங்கையில் சுற்றுலா பயணிகளால் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான, வற் வரியை திரும்ப பெறுவதற்காக, ஒன்று இன்று (04) கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
50,000 ரூபாவுக்கும் அதிகமான வற் வரி செலுத்தி, 90 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், அவர்கள் செலுத்திய வற் வரித்தொகையை பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை பொருட்களை கொள்வனவு செய்ய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்கும் இலங்கையில் வரி வருமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது.