கடந்த வார இறுதியில் போர்ன்மவுத்துக்கு எதிரான கால்பந்து சங்க (FA) கிண்ண காலிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது.
இதனால், எர்லிங் ஹாலண்ட் குறைந்தது இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு ஓய்வெடுக்கக் கூடும் என்று அவரது மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காயத்தின் முழு அளவையும் தீர்மானிக்க எர்லிங் ஹாலண்ட்டுக்கு மேலும் பரிசோதனைகள் தேவைப்படும் என்று மான்செஸ்டர் சிட்டி (மார்ச் 31) திங்களன்று அறிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை 2-1 என்ற வெற்றியின் 61 ஆவது நிமிடத்தில் ஹாலண்ட் மாற்றப்பட்டார்.
24 வயதான அவர் இடது கணுக்கால் பிரச்சனை காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்டுக்கு எதிரான அரையிறுதியில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.