கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்னவின் கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலியன் மாதவன் என்ற 23 வயதுடைய சந்தேக நபர், கொழும்பு 15, ஹெலமுத்து செவன பகுதியைச் சேர்ந்தவர்.
சந்தேகநபர் நேற்று (21) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை சுட்டிக்காட்டி கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பில் இதுவரை 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19.02.2025 அன்று, புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் கனேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை சுட்டுக் கொன்ற குற்றம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.