கனடாவில் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கு சிக்கல்

கனடாவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட விடுதலைப் புலிகள்(LTTE) அமைப்பின் உறுப்பினர் என கனேடிய அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவரது குடியுரிமை விண்ணப்பத்தை அங்கீகரிக்குமாறு அமைச்சர் Gary Anandasangaree கடிதம் அனுப்பியமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


செல்வகுமாரன் எனும் இலங்கையருக்கு கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இலட்சினைகளுடன் கூடிய கடிதமொன்றை கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு 2016 மற்றும் 2023ஆம் ஆண்டு திகதியிட்டு அனுப்பியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


செல்வகுமாரனின் LTTE அமைப்புடனான நீண்ட கால தொடர்பை மேற்கோள்காட்டி கனேடிய குடிவரவு – குடியகல்வு திணைக்களம் பல தடவைகள் அவரது கோரிக்கையை நிராகரித்தபோதிலும் மனிதாபிமானம் மற்றும் குடும்பப் பிரிவை மேற்கோள் காட்டி Gary Anandasangaree அதனை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


செல்வகுமாரனின் குடியுரிமைக்கான முயற்சி 2005ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படுவதுடன், அவரது மேன்முறையீடுகள் கனேடிய நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டன.


செல்வகுமாரன் 1992 – 1998 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் LTTE அமைப்பின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் புலம்பெயர் வலையமைப்பினூடாக நிதி திரட்டியமை உள்ளிட்ட வன்முறைகளை எடுத்துக்காட்டி கனேடிய எல்லை சேவை நிறுவனம் விரிவான அறிக்கை வௌியிட்டுள்ளது.


2023 ஜூலை மாதம் தாம் அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் குடியுரிமை தொடர்பான கடிதங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டதாகவும் தமது ஊழியர்களுக்கும் அது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதாகவும் Gary Anandasangaree தெரிவித்துள்ளார்.


பாரபட்சம் உணரப்பட்டமையால் LTTE மற்றும் அதன் கனேடிய கிளை அமைப்பான உலகத் தமிழ் இயக்கம் தொடர்பான தீர்மானங்களிலிருந்து தன்னைத்தானே விலக்கிக்கொண்டதாகவும் Gary Anandasangaree தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply