கஹவத்தையில் துப்பாக்கி சூடு; இளைஞர் உயிரிழப்பு, மற்றுமொருவர் காயம்!

கஹவத்தை பகுதியில் நேற்றிரவு (ஜூன் 30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த வன்முறையில் மற்றுமோர் நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, நேற்று இரவு கஹவத்தை, யாயன்னா பகுதியில் ஒரு வீட்டிற்கு நான்கு நபர்கள் வந்து இரண்டு இளைஞர்களையும் கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட நபர்கள் பின்னர் தொலைதூரப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் 22 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொருவர் 27 வயது இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பான விபரம் இன்னும் கண்டறியப்படவில்லை.

அதேநேரம், இந்த சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!