இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியத்தில் ஆயுததாரிகளெனச் சந்தேகிக்கப்படுவோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரபலமான பஹல்கம் பகுதியிலேயே நேற்று (22.04.25) இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பொதுமக்கள் மீதான மோசமான தாக்குதல் இதுவாகும்.
காஷ்மிர் எதிர்ப்பு என்ற மிகவும் அறியப்படாத ஆயுதக் குழுவொன்று சமூக வலைத்தள பதிவொன்று மூலம் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
இதேவேளை சவுதி ஆதேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மோடி தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் , தனது பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக நாடு திரும்பியுள்ளாா். நாடு திரும்பும்போதும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வளியை பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது
The post காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் – 26 பேர் பலி! appeared first on Global Tamil News.