எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, கிரீஸ் தடவிய மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிட்டிகல பொலிஸாரின் கூற்றுப்படி, நிகழ்வுக்குத் தயாராகும் போது 40 அடி உயரமுள்ள கரீஸ் தடவிய மரத்திலிருந்து தவறி வீழ்ந்த சிறுவன், எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 16 வயது சிறுவன் என்றும், அவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பிடிகல பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.