கெஹெலிய – குடும்ப உறுப்பினர்களுக்கெதிராக குற்றப்பத்திரிகை

 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  குறித்த  குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.

இதனையடுத்து, தலா 50,000 ரூபாய் ரொக்கம் மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்   , அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்ததுடன் அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பெற்று அறிக்கைகள் கோரப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply